Posts

Showing posts from January, 2022

குரங்கு மனம்

திருநீர் அணி, திருநாமம் தரி என்பர். சிவப்பு ஆடை அணி, கருப்பு ஆடை தரி என்பர். காவி உடுத்தி காவடி எடு என்பர். விதியை வெல்ல பலவழிகள் சொல்வர். வட கங்கை சென்று வாரணாசியில் குளி  வரன் கிட்டும் என்பர். ஆறுபடை வீடு சென்று ஆறுமுகத்தானை  ஆராதனை செய் என்பர். நூறு மணி கொண்டு நூறு எட்டு ஜபம்  நூத்திஎட்டு நாட்கள் செய்திடு என்பர். ஐந்து உலோகம் கொண்ட ஐந்து முக  ஆஞ்சநேயர் காசை அங்கத்தில் அணி என்பர். ஏழுமுக உதிரட்சையை ஏழு ரத்தினங்கள் கொண்ட  மாலையை ஏகமனிதாக தரி என்பர். மடாதிபதிகள் மந்தரித்துக் கொடுத்த  மாத்திரைகளை முப்பது நாட்கள் முழுங்கு என்பர். வீதி வித்தைக்காரன் வியாதி, வசீகரம், வரன்,  வறுமை, வறட்சி எல்லாவற்றிற்கும் ஏக  தாயத்து கையில் அணி என்பர். சித்தயோகம், சிவயோகம், ஆத்மயோகம், மானசயோகம்  பரமாத்மயோகம், புராதன யோகம் என்ற பலயோக  விதிகளைப் பின்பற்று என்பர். நித்தியானந்தம், பரமானந்தம், ஆத்மானந்தம், அத்புதானந்தம்  க்ரியானந்தம் என்ற ஆனந்தமடங்களுக்குச் சென்றால், ஆனந்தம் கைகூடும் என்பர். கடைசியாக இவையெல்லாம் கண்டும் கேட்டும் இந்த மனம்  கிளைவிட்டு கிளைதாவும் "குரங்கு மனமாக" மாறுவதில் என்ன ஆச்சரியம்!

திக்குத் தெரியாத காட்டில்

  ஐம்புலன்களையும் அடக்கி அவன் வழி சென்றால் , ஆண்டவனை அணுகலாம் என்பர்.   புலனை அடக்கி புத்தர் வழி சென்றால் , அப்புறத்தை எத்துவார் என்பர்.   ஐந்துமுறை ' சலாம் ' தொழுதால் , அல்லாவின் ஆசி பெறுவாய் என்பர்.   மேற்கு நோக்கிச் சென்று மெக்கா யாத்திரையில் , மேல் கதி அடையலாம் என்பர்.   கர்த்தாவை காலையிலும் மாலையிலும் தோத்தரித்தால் , கவலை நீங்கும் என்பர்.   பள்ளிக்குச் சென்று பைபிள் படித்தால் , பரலோகமாதாவைக் காண்பர் என்பர்.   மனதை அடக்கி மனனம் செய்தால் , மகேசன் அருள் பெறுவாய் என்பர்.    மதுரை சென்று மலைமகளை வேண்டினால் , மனசாந்தி கிட்டும் என்பர்.   சிதம்பரம் சென்று சிற்றம்பலத்தைத் தரிசித்தால் , சித்தம் தெளியும் என்பர்.   திருப்பதி சென்று திருப்பணி ஆற்றினால் திருமலையானின் திருப்பாதங்களை அடையலாம் என்பர்.   நாலு மண்டலம் நாவை அடக்கி நாராயணனை ஜபித்தால் நரஜன்மம் கடக்கலாம் என்பர்.   பால் குடம் எடுத்து பழனி சென்று பாலகனைத் தரிசித்தால் , பலன் கைகூடும் என்பர்.   விரதம் கைக்கொண்டு விநாயகனை வணங்கினால் , வினைகள் தீரும் என்பர்.

இவன் கண்டும் காணாத இயற்கை

  இயற்கை என்பது இயல்பு , இனிமை , இம்மியும் நகராது இயங்குவது.   எறும்புகளின் ஒழுக்கம் , கட்டுப்பாடு ஒற்றுமைக்கு இணையேது ?   ஆனால் , இவனோ ' எறும்புக்கு சமானம் ' என்ற உவமையைத் துச்சமென ஏழ்மை செய்வான் , இம்மனிதன்!   தேனீ ஒரு பூச்சி! என்பது இவன் இகழ்ச்சி சொல் , ஆனால் , தேன் திரட்டித் தன் இனைத்தைப் பேணும் திறமைதனை என் சொல்வேன்!   சொட்டுத் தேன்பொருட்டு , பல மலர்களை தேடி அலைந்து , மரம் , மலை உச்சிகளில் மயனும் வியக்கும் மனை கட்டி , தன் மக்களைப் பேணி காப்பதின் அதிசயம்தான் என்ன!   வேலை , விடா முயற்சி வல்லமை தரும் என்பதிற்கேற்ப , சுறுசுறுப்பைச் சுட்டிக்காட்டி , நமக்குக் ' கல்வி புகட்டும் ' அது ஒரு பூச்சியா ?   ஒரு கசப்பு மா விதை மண்ணில் புதைந்து , கிளையும் கொப்புமாக வளர்ந்து , ஒரு பெரிய மரமாகி , இனிய மாங்கனிகளை மக்களுக்கு அளிக்கும் " அந்நன்றி என்று தருங்கள் என வேண்டா" என்ற சொல்லுக்கு இணங்க நமக்கு அறிவூட்டும் ஜட மரமா அது!   ஒரே ஒரு சிறிய தானியம் விதைத்த ஆறு மாதத்தில் ஆயிரம் அரிசியாக விளைந்து அறுசுவையூட்டி , நமக்கு

எங்கே போகிறோம்

  எங்கே போகிறோம் ? எதை நோக்கிப் போகிறோம் ? எதற்காகப்   போகிறோம் ? ஏன் போகிறோம் ? இதற்கெல்லாம்   விடை பிறைவிக் கடலைத் தாண்டுவதுதான் என்பர்.   வாழ்க்கை என்பது ஒரு கடல் என்றால் , இதில் கரை ஏது ? மரணம் தானோ ? உணர்ச்சி உடல் என்ற துடுப்புகள் மட்டும் வாழ்க்கை என்ற கடல் அலைகளை எதிர்கொள்ளுமோ ?   உள்ளம் என்ற பாய்மரக் கப்பல் , காலம் என்ற காற்றுடன் சேர்ந்து , பகுத்தறிவு என்ற காந்த கருவி வழி காட்ட , வாழ்க்கைக்   கடலைக் கடக்கும் மாலுமிக்குக் கரை எங்கே ?   காலம் காலமாகக் காலத்தைக் கடந்து வந்தவர்கள் , கரை தெரியாமல் கனவு கண்டு , கற்பனையால் கண்டுபிடித்த கண்ணுக்குத் தெரியாத கலங்கரை விளக்குதான் "கடவுள்" என்று சொல்லிக்கொண்டு காலம் கடத்தினார்களா ? இல்லை! பிறப்பு , இறப்பு, மறுப்பிறப்பு , மரணம் என்று கழன்று ஓடும் ஒரு சகடு தானா வாழ்க்கை! ?

கடவுளிடம் நான் கேற்ற ஒரே கேள்வி

அண்டம் படைத்தாய் , அண்ட சராசரங்களைப் படைத்தாய் , நீர் நிலம் படைத்தாய் , காற்றும் கனலும் படைத்தாய் , கதிரவனைப் படைத்தாய் , கதிர்களுடைய பயிர்களைப் படைத்தாய் , காலங்களைப் படைத்தாய் , கனிகளைப் படைத்தாய் , மழையைப் படைத்தாய் , மலைகளையும் மரங்களையும் படைத்தாய் , வனங்களையும் வனவிலங்குகளையும் படைத்தாய் , ஆனால் , பிறகு என் போன்ற மானிடர்களை ஏன் படைத்தாய் ? என் உடலைப் படைத்தாய் அதனுள் உயிரை வைத்தாய் உயிர் மூச்சும் உறுப்புகளையும் உதிரமும் சேர்த்தாய் , அதற்கு உள்ளம் என்பதை விதைத்தாய் , அதனுள் உணர்வும் உணர்ச்சியும் புகுத்தினாய். இதனுள் உழன்று உழைத்து உறவாடியபின் , பலன்களை உழ்வினை , உன் விதி என்று நீயே நிர்ணயித்தாய். பிறகு ' நான் ' என்ற அகந்தையை எனக்கு  நீயேதான் கொடுத்தாய் பசி , பாசம் , பற்று , பால் உணர்ச்சிகளையும் அதில் சேர்த்தாய். போதாதற்குப் பகுத்தறிவு என்பதையும் புகுத்தினாய்.   இதையெல்லாம் கொண்டு என்னை இந்த  வாழ்க்கை என்ற படுகுழியில் தள்ளி படாத  பாடு எல்லாம் பட்டு , பயணத்தைப் பாடை வரை பார் என்றாய்.   அதன் விளைவுகளை பாவம் , புண்ணியம்