கடவுளிடம் நான் கேற்ற ஒரே கேள்வி

அண்டம் படைத்தாய்,

அண்ட சராசரங்களைப் படைத்தாய்,

நீர் நிலம் படைத்தாய்,

காற்றும் கனலும் படைத்தாய்,

கதிரவனைப் படைத்தாய்,

கதிர்களுடைய பயிர்களைப் படைத்தாய்,

காலங்களைப் படைத்தாய், கனிகளைப் படைத்தாய்,

மழையைப் படைத்தாய்,

மலைகளையும் மரங்களையும் படைத்தாய்,

வனங்களையும் வனவிலங்குகளையும் படைத்தாய்,

ஆனால்,

பிறகு என் போன்ற மானிடர்களை ஏன் படைத்தாய்?

என் உடலைப் படைத்தாய் அதனுள் உயிரை வைத்தாய்

உயிர் மூச்சும் உறுப்புகளையும் உதிரமும் சேர்த்தாய்,

அதற்கு உள்ளம் என்பதை விதைத்தாய்,

அதனுள் உணர்வும் உணர்ச்சியும் புகுத்தினாய்.

இதனுள் உழன்று உழைத்து உறவாடியபின்,

பலன்களை உழ்வினை, உன் விதி என்று

நீயே நிர்ணயித்தாய்.

பிறகு

'நான்' என்ற அகந்தையை எனக்கு  நீயேதான் கொடுத்தாய்

பசி,பாசம், பற்று, பால் உணர்ச்சிகளையும் அதில் சேர்த்தாய்.

போதாதற்குப் பகுத்தறிவு என்பதையும் புகுத்தினாய்.

 

இதையெல்லாம் கொண்டு என்னை இந்த  வாழ்க்கை என்ற

படுகுழியில் தள்ளி படாத  பாடு எல்லாம் பட்டு,

பயணத்தைப் பாடை வரை பார் என்றாய்.

 

அதன் விளைவுகளை பாவம், புண்ணியம்  என்று நீயே

தீர்மானம் செய்தாய்.

 

இதை எல்லாம் நான் கேட்டேனா?

நீயே கொடுத்துவிட்டு என்னை வாழ்க்கை

வாழ்ந்து பார் என்றாய்.

 

நீ என்னை எதிர்காகப் படைத்தாய்?

நீ யார் என்று கேட்டால்

அசையாதது, அழியாதது, அளவு இல்லாதது

அறியமுடியாதது, அறிவுக்கு எட்டாதது

என்ற பல புதிர்களைப் போடுகின்றாய்.

 

நான் உன்னிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ என்னை ஏன் படைத்தாய்? அல்லது இந்த

வாழ்க்கையின் மர்மம் என்ன?

இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல். 

பீமாச்சார் 

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்