திக்குத் தெரியாத காட்டில்

 

ஐம்புலன்களையும் அடக்கி அவன் வழி சென்றால்,

ஆண்டவனை அணுகலாம் என்பர்.

 

புலனை அடக்கி புத்தர் வழி சென்றால்,

அப்புறத்தை எத்துவார் என்பர்.

 

ஐந்துமுறை 'சலாம்' தொழுதால்,

அல்லாவின் ஆசி பெறுவாய் என்பர்.

 

மேற்கு நோக்கிச் சென்று மெக்கா யாத்திரையில்,

மேல் கதி அடையலாம் என்பர்.

 

கர்த்தாவை காலையிலும் மாலையிலும் தோத்தரித்தால்,

கவலை நீங்கும் என்பர்.

 

பள்ளிக்குச் சென்று பைபிள் படித்தால்,

பரலோகமாதாவைக் காண்பர் என்பர்.

 

மனதை அடக்கி மனனம் செய்தால்,

மகேசன் அருள் பெறுவாய் என்பர்.

  

மதுரை சென்று மலைமகளை வேண்டினால்,

மனசாந்தி கிட்டும் என்பர்.

 

சிதம்பரம் சென்று சிற்றம்பலத்தைத் தரிசித்தால்,

சித்தம் தெளியும் என்பர்.

 

திருப்பதி சென்று திருப்பணி ஆற்றினால்

திருமலையானின் திருப்பாதங்களை அடையலாம் என்பர்.

 

நாலு மண்டலம் நாவை அடக்கி நாராயணனை ஜபித்தால்

நரஜன்மம் கடக்கலாம் என்பர்.

 

பால் குடம் எடுத்து பழனி சென்று பாலகனைத்

தரிசித்தால், பலன் கைகூடும் என்பர்.

 

விரதம் கைக்கொண்டு விநாயகனை வணங்கினால்,

வினைகள் தீரும் என்பர்.

 

வேதம் படி, வேள்வி சாய்,

வேண்டும் என்பதை பெறுவாய் என்பர்.

 

இது செய், இவனைத் தொழு இல்லல்  நீங்க என்பர். 

அது செய் அவனைத் தொழு கவலைகள் நீங்க என்பர்.

 

திருத்தலங்களும் தீர்த்த யாத்திரைகளும் சென்றேன்...

தீரவில்லை என் தீராத கவலைகள்.

 

முடிவாக,

"திக்குத் தெரியாத காட்டில் தேடித் தேடி

அலைவதுதான் வாழ்க்கையா?"


பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்