இவன் கண்டும் காணாத இயற்கை

 

இயற்கை என்பது இயல்பு , இனிமை,

இம்மியும் நகராது இயங்குவது.

 

எறும்புகளின் ஒழுக்கம், கட்டுப்பாடு

ஒற்றுமைக்கு இணையேது?

 

ஆனால், இவனோ 'எறும்புக்கு சமானம்' என்ற

உவமையைத் துச்சமென ஏழ்மை செய்வான், இம்மனிதன்!

 

தேனீ ஒரு பூச்சி! என்பது இவன் இகழ்ச்சி சொல்,

ஆனால், தேன் திரட்டித் தன் இனைத்தைப் பேணும்

திறமைதனை என் சொல்வேன்!

 

சொட்டுத் தேன்பொருட்டு, பல மலர்களை தேடி அலைந்து,

மரம், மலை உச்சிகளில் மயனும் வியக்கும்

மனை கட்டி, தன் மக்களைப் பேணி காப்பதின்

அதிசயம்தான் என்ன!

 

வேலை, விடா முயற்சி வல்லமை தரும் என்பதிற்கேற்ப,

சுறுசுறுப்பைச் சுட்டிக்காட்டி, நமக்குக்

'கல்வி புகட்டும்' அது ஒரு பூச்சியா?

 

ஒரு கசப்பு மா விதை மண்ணில் புதைந்து,

கிளையும் கொப்புமாக வளர்ந்து, ஒரு பெரிய மரமாகி,

இனிய மாங்கனிகளை மக்களுக்கு அளிக்கும்

"அந்நன்றி என்று தருங்கள் என வேண்டா" என்ற

சொல்லுக்கு இணங்க நமக்கு அறிவூட்டும் ஜட மரமா அது!

 

ஒரே ஒரு சிறிய தானியம் விதைத்த ஆறு மாதத்தில்

ஆயிரம் அரிசியாக விளைந்து அறுசுவையூட்டி,

நமக்கு அறிவூட்டுவது எது!

ஒரு சிறிய தானியம் அல்லவோ அது!

 

கடல் தண்ணீர், உண்ணீர் ஆகாதாயினும்,

தன்னை வெயிலில் வருத்தி, மேல் சென்று

மழையாக நமக்கு நன்நீர் தரும் இயற்கையின்

இயல்புதான் என்ன?

 

ஆனால் மனிதன் இவனோ இயற்கையின் இயல்பும், ஈகையும்

கண்ண்டிருந்தும் இம்மியும் கற்காது, ஈவு இறக்கம் இல்லாது

இயற்கையை அழிக்கும் கயவன் அல்லவா?

பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்