எங்கே போகிறோம்

 

எங்கே போகிறோம்?

எதை நோக்கிப் போகிறோம்?

எதற்காகப்  போகிறோம்?

ஏன் போகிறோம்?

இதற்கெல்லாம்  விடை

பிறைவிக் கடலைத் தாண்டுவதுதான் என்பர்.

 

வாழ்க்கை என்பது ஒரு கடல் என்றால், இதில் கரை ஏது?

மரணம் தானோ?

உணர்ச்சி உடல் என்ற துடுப்புகள் மட்டும்

வாழ்க்கை என்ற கடல் அலைகளை எதிர்கொள்ளுமோ?

 

உள்ளம் என்ற பாய்மரக் கப்பல்,

காலம் என்ற காற்றுடன் சேர்ந்து,

பகுத்தறிவு என்ற காந்த கருவி வழி காட்ட,

வாழ்க்கைக்  கடலைக் கடக்கும் மாலுமிக்குக் கரை எங்கே?

 

காலம் காலமாகக் காலத்தைக் கடந்து வந்தவர்கள்,

கரை தெரியாமல் கனவு கண்டு, கற்பனையால்

கண்டுபிடித்த கண்ணுக்குத் தெரியாத

கலங்கரை விளக்குதான் "கடவுள்" என்று சொல்லிக்கொண்டு

காலம் கடத்தினார்களா?

இல்லை!

பிறப்பு, இறப்பு, மறுப்பிறப்பு, மரணம் என்று

கழன்று ஓடும் ஒரு சகடு தானா வாழ்க்கை!?

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்