Posts

எப்படி பேசுகிறார்

Image
  Photo Credit:  Alberto Buscató Vázquez  -  Own work                                     ·        CC BY-SA 4.0      ·        File:  Hindu bells in a Shiva temple.jpg 1. மிளகாய் விற்பவன் காரசாரமாக பேசுவான். கோவில் பூசாரி கணீர் கணீர் என்று பேசுவார். 2. ஆபரண வியாபாரி நிறுத்தி நிதானமாக பேசுவார். துணிக்கடைக்காரர் நீட்டி அளந்து பேசுவார். 3. வீதியில் வெண்டைக்காய் விற்பவர் வழவழ வென்று பேசுவார். 4. விறகு கடைக்காரர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவார். 5. தட்டான் பொடி வைத்து பேசுவார்.  6. யோகா ஆசிரியர் நீட்டி மடக்கி பேசுவார்.  7. எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி ஓட்டுபவர் நிறுத்தாமல் பேசுவார். பேசஞ்சர் ரயில் வண்டி ஓட்டுபவர் நிருத்தி நிறுத்தி  பேசுவார்.  8. ஹோட்டல் சர்வர் சுடச்சுட பேசுவார். 9. சமுசா விற்பவன் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவான். 10. பல் டாக்டர் வெடுக் வெடுக் என்று பேசுவார்.  11. பட்டாசுக் கடைக்காரன் பட பட வென்று பேசுவான்.  12. பட்டுப்புடவை விற்பவன் பட்டும் படாமலும் பேசுவான்.  13. கடைசியாக காதலர்கள் தொட்டும் தொடாமலும் பேசுவர். பீமாச்சார்

காலம் கடந்த கட்டபொம்மன் வழி கேள்விகள்

Image
1. அன்று ஆங்கிலேயரிடம் கட்டபொம்மன் கேட்ட கேள்வி, இயற்கையில் காணும் கட்சிகளைக் கண்டு அவைகள் தூண்டவைத்தது. விடை தேடும் இந்த பல கேள்விகள்.  2. நதி தன்  நீர்கொண்டு உன் நிலத்திற்கு நீர் பாசனம் செய்ய நீர் வரி கேட்பதில்லை. ஏன்? 3. கார்மேகம் மழை பொழிய கட்டணம் கேப்பதில்லை. ஏன் ? 4. கதிரவன் காலம் தவறாது காலையில் உதிக்க ஊதியம் கேட்பதில்லை. ஏன்? 5. குழல் போல் கூவும் குயில், தோகை விரித்து ஆடும் மயில் கூலி கேட்பதில்லை. ஏன்? 6. பல வர்ணமும் வாசனையும் கொண்ட பூ மலர்கள் போது குலுங்குவதற்கு பாராட்டு எதிர்பார்ப்பதில்லை. ஏன்? 7. பட்டாடை நெய்ய பட்ட நூலுக்காக பலி கொடுத்த பல்லாயிரம் பட்டுப்பூச்சிகள் பதக்கம் கேட்பதில்லை. ஏன்? 8. பதநீர் ஈன்ற பனைமரத்திற்கும் இளநீர் தரும் தென்னைக்கும், செய் நன்றி செப்பினாயா? ஏன்?  9. கரி  பொருள் எறிவாயுவும் மீன் இனங்களும், கடலில் நீ எடுத்த  செல்வங்கள். இவைகளுக்கு ஏதேனும் கைமாறு  எவரேனும்  செய்ததுண்டா? இல்லையே! 10. விடை விதைத்து விவசாயம் செய்து வியாபாரம் செய்யும் நீ அந்த விதைகளுக்கும், வித்துகளுக்கும்   விசுவாசம் காட்டியது உண்டா ? 11. மணமணக்கும் மரச்சந்தினத்தை, மனமாற நீ வாழ்த்தியது

உனக்கும் காலம் வரும்

Image
1. சிங்கப்பூர் மக்கள் தூக்கத்திலிருந்து விழுத்து எழுந்து இரண்டு மணி நேரம்   ஆகிவிட்டது. ஆனாலும் இந்தியர்கள் அச்சமயம் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக இந்தியர்களை  சோம்பேறிகள்  என்று எண்ண வேண்டாம். 2. சூரியன் கிழக்கே முதலில் உதிப்பது சிங்கப்பூரில். அது இந்தியாவைவிட  முன்னதாகவே. அதுதான் கால வித்தியாசம் .  3. உலகில் எல்லா உயிரினங்களும் அவரவரகளின் இயற்கை நிர்ணயத்தின்படி கால வித்தியாசத்திற்கு உட்பட்டவை. வாழ்க்கை என்பது   ஒரு மாறுபட்ட காலத்தின் கோலம்.  4. யானைக்கு நூறு வயது என்றால் பூனைக்கு பத்து வயது காலம். நத்தை  நகர்கிறது.  நாற்பது மைல் ஓடும் சிறுத்தையின் வேகம். அது அவரவர்களின் காலம். கடவுள் கொடுத்த திறமை. இயற்கை.   5. தாமரை காலையிலும் அல்லி மாலையிலும் பூக்கிறது. ஆறு மாத பயிர்களும் உண்டு. ஆறு வார செடிகளும் உண்டு. அது அவர்களின் காலம்.  6. ஒருவருக்கு முப்பது வயதுமுடிந்தும் மணமாகவில்லை. இவருக்கு 20      வயதில் மணம் முடிந்துவிட்டது. 7.  அவளுக்கு மணம் முடிந்து ஒரு வருடத்தில் தாயாகி விட்டாள். இவளுக்கு மணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் மக்கட்பேறு இன்னமும் இல்லை.  8. அவன் இருபத்தி இ

என் தாய்

Image
                                                           என் தாய்  1. உனக்கு இருபது வயது ஆகும் முன்பே எனக்கு உயிர் தந்தாய். பத்து மாதம்      சுமந்து இவ்வுலகில் பிறக்க வைத்தாய். 2. உன் பாலூட்டி வாழ்க்கையின் என் முதல் பசியை தீர்க்க வைத்தாய்.       கிழிந்த துணித்தொட்டியில் படுக்க வைத்து தூங்க வைத்தாய்.  3. என்னை சுமந்த உன்னுடன் விதி விளையாடி நான் பிறந்த ஒரே வருடத்தில்      கணவனை இழந்தாய். விதவைத்தாய் என்று  உலகத்தோரிடம் கேலிப்     பெயர் பெற்றாய்.  ஆனால் தந்தையாகவும் தமயனாகவும் என்னைப்     போற்றி வளர்த்தாய்.  4. ஏழையின் பணமுடை இருப்பினும் பாட்டும் நாட்டியமும் கற்பிக்க     வைத்தாய். பள்ளியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி     அளித்தாய்.  5. பரிசுக் கோப்பையுடன் வீட்டில் நுழைந்த போது என்னை உச்சி முகர்ந்து     நீ பூரித்தாய். 6. எச்சிரமும் பாராமல் மூச்சுத்திணற மிதி வண்டியின் பின் ஓடிவந்து நான்      முன்னேறுவதைக் கண்டு மனம் மகிழ்ந்தாய்.  7. தனக்கு காச நோய் இருப்பினும் காசு, பணம் பார்க்காமல் என் கல்லூரி     படிப்பின்  செலவை செய்தாய்.  8. வறுமை இருப்பினும் பொறுமையுடனும், பரிமையுடனும்

பனிமலையில் கண்டெடுத்த பாரத புதல்வன்

Image
                                                         Photo Credit: Express photo: Pradeep Kumar, Indian Express 1. இமய மலை பனியில் பத்து நாட்கள் படுகுழியில் புதைந்து வெளிவந்த     பாரதப்படை வீரன், பாரத தேசத்திற்கே ஒரு பாடம் கற்பித்த  தீரன். 2. நம் நலம் வேண்டி நாடி துடி துடித்து நற்கதி அடைந்த நம்மில் ஒரு      நரேந்திரன் அவன்.  3. கடும் பனியில் அறுசுவை உண்டிலன். அறை மஞ்சத்தில் உறங்கிலன். தன்      கண்மணி குழைந்தையை கொஞ்சிலன். கை பிடித்த அவளை அணைத்திலன் . 4. உயர பனியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திலன். த ன் சொந்த பந்தங்களை      வெகுநாள் பார்த்திலன். 5. காலன் எப்பொழுதும் எதிரிலேயே நிற்பது நினைத்திலன். வெள்ளி பனி      மலையில் பனியைத் தவிர வேறு பசுமையும் பறக்கும் பறவைகளையும்      கண்டு களித்தலன், அனுமந்தப்பா என்று பெயர் படைத்த அவன்.  6. கர்நாடகத்தின் கர்ம வீரன் அவன்.  அன்னை பாரதத்தாயை காக்க அமர     மரணம் எய்தவன் அவன். நாட்டைக் காக்க உயிர் கொடுத்த அவனுடைய      வீட்டைக் காக்க யார் முன் வருவார்? பீமாச்சார்  NDTV, along with several other channels, covered the incident of the avalanche in the Sia

வானம் பிளந்தது, சென்னை மிதந்தது

Image
Photo   Licensed under the  Government Open Data License - India (GODL) சென்னையில் அன்று வானம் பிளந்தது.  மாநகர வாழ்க்கை முற்றிலும் சிதைந்தது. தெருக்களில் வாகனங்கள்  மிதந்தன. விடாமல் நாட்கள் பெருமழை பொழிந்தது. செய்கை நாகரீக  நகரத்தின் செருக்கு ஒழிந்தது. இதைகண்ட இயற்கை கை  கொட்டி சிரித்தது. இரண்டு மாடி மனைகளில் புகுந்தது மழை தண்ணீர். பல குடும்பங்களின்  கண்களில் வழிந்தது கண்ணீர்.  வேகமாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியது வெள்ளத்தில் மிதந்த  அந்த வேளச்சேரி. கூவத்தில் வெள்ளம் கரை புரண்டு அடித்துச் சென்றது.  அதன் இரு கரைகளில் சேரி.  கூரையின் மேல் நின்று உணவுக்கு கூவியது ஒரு செல்வாக்கு குடும்பம். குடி  தண்ணீருக்கு தவித்துக் கதறியது ஒரு கூட்டுக்  குடும்பம்.  சொகுசுக் கார்கள் இருந்தும் பயனில்லை வீதி கடக்க. ஆனால் மீனவர்களின்  மரப்படுகுகள் உதவியது கரை சேர்க்க.  கரைகளில் கண்மூடித்தனமாக கட்டடங்கள் அத்து மீறி தன உடலில் சேதம்  தாங்காது உடைந்து பழி தீர்த்தது ஏரி.  வெள்ளம் சூழ்ந்து தவித்தது வானளாவிய அடுக்குமாடி. மின்சாரம் இல்லாது  பல இடங்களில் தவித்து நின்றது, அடுக்கு மாடிகள். அதுதான் அவர்களின்  உயிர

தியானம் (Meditation)

Image
  2. தியானம்  (Meditation) Photo Credit: National Institutes of Health, USA மன உளைப்புத்தீர செய் தியானம். மன உளைச்சலுக்கும் தேக அலைச்சலுக்கும் தீர்வு தியானம். அமைதிக்கும் நிம்மதிக்கும் ஒரே மருந்து தியானம். அதி காலையிலும் மாலையிலும் நீ செய்திடு தியானம். காலையில் காகம் கரையும் வேளையில் மிகவும் நல்லது தியானம். நானும் செய்ய முயன்றேன் காலையில் தியானம். கால் மணி முன்னதாகவே வைத்தேன் அலாரம் மணி அடிக்க. காலையில் கண்ணதாசன் பாட்டுடன் கடிகாரம் மணி அடிக்க வெறுப்புடன் தானாகவே என் கை அதனை தட்டி அணைத்தது. நித்திரை மன உருதியை கெடுத்து தலையாணியை கட்டி அணைத்தது. மாலையிலோ? மாலை வீடு வந்தவுடன் 6 மணிக்கு அமெரிக்கா எண்ணை நிலவரம், 7 மணிக்கு யூரோப்பாவின் சந்தை கலவரம். எட்டு மணிக்கு கணினி கடிதங்கள் காத்து கிடக்க ஏராளம். அவைகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லை தாராளம். ஒன்பது மணிக்கு உற்றார் கூடிய ஒரு வேளை உணவுதான் அதுவே கரணம். பத்து மணிக்கு பட்டென்று படுத்து கனவில் நீண்ட ஒரு பிரயாணம். கண்விழுத்துப் பார்க்கையில் கடந்துவிட்டது காலை. அலுவலகத்தில் காத்துக்  கிடக்கின்றன ஏராளமான வேலை.  பார்க்கலாம் முயன்றால் மற்று ஒரு நாள