எப்படி பேசுகிறார்

 



Photo Credit: Alberto Buscató Vázquez - Own work

                                    ·       CC BY-SA 4.0    ·       File: Hindu bells in a Shiva temple.jpg



1. மிளகாய் விற்பவன் காரசாரமாக பேசுவான். கோவில் பூசாரி கணீர் கணீர் என்று பேசுவார்.

2. ஆபரண வியாபாரி நிறுத்தி நிதானமாக பேசுவார். துணிக்கடைக்காரர் நீட்டி அளந்து பேசுவார்.

3. வீதியில் வெண்டைக்காய் விற்பவர் வழவழ வென்று பேசுவார்.

4. விறகு கடைக்காரர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவார்.

5. தட்டான் பொடி வைத்து பேசுவார். 

6. யோகா ஆசிரியர் நீட்டி மடக்கி பேசுவார். 

7. எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி ஓட்டுபவர் நிறுத்தாமல் பேசுவார். பேசஞ்சர் ரயில் வண்டி ஓட்டுபவர்
நிருத்தி நிறுத்தி  பேசுவார். 

8. ஹோட்டல் சர்வர் சுடச்சுட பேசுவார்.

9. சமுசா விற்பவன் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவான்.

10. பல் டாக்டர் வெடுக் வெடுக் என்று பேசுவார். 

11. பட்டாசுக் கடைக்காரன் பட பட வென்று பேசுவான். 

12. பட்டுப்புடவை விற்பவன் பட்டும் படாமலும் பேசுவான். 

13. கடைசியாக காதலர்கள் தொட்டும் தொடாமலும் பேசுவர்.


பீமாச்சார்



Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்