உனக்கும் காலம் வரும்


1. சிங்கப்பூர் மக்கள் தூக்கத்திலிருந்து விழுத்து எழுந்து இரண்டு மணி நேரம்   ஆகிவிட்டது. ஆனாலும் இந்தியர்கள் அச்சமயம் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக இந்தியர்களை  சோம்பேறிகள்  என்று எண்ண வேண்டாம்.

2. சூரியன் கிழக்கே முதலில் உதிப்பது சிங்கப்பூரில். அது இந்தியாவைவிட முன்னதாகவே. அதுதான் கால வித்தியாசம்

3. உலகில் எல்லா உயிரினங்களும் அவரவரகளின் இயற்கை நிர்ணயத்தின்படி கால வித்தியாசத்திற்கு உட்பட்டவை. வாழ்க்கை என்பது  ஒரு மாறுபட்ட காலத்தின் கோலம். 

4. யானைக்கு நூறு வயது என்றால் பூனைக்கு பத்து வயது காலம். நத்தை நகர்கிறது.  நாற்பது மைல் ஓடும் சிறுத்தையின் வேகம். அது அவரவர்களின் காலம். கடவுள் கொடுத்த திறமை. இயற்கை. 

5. தாமரை காலையிலும் அல்லி மாலையிலும் பூக்கிறது. ஆறு மாத பயிர்களும் உண்டு. ஆறு வார செடிகளும் உண்டு. அது அவர்களின் காலம். 

6. ஒருவருக்கு முப்பது வயதுமுடிந்தும் மணமாகவில்லை. இவருக்கு 20 

    வயதில் மணம் முடிந்துவிட்டது.

7.  அவளுக்கு மணம் முடிந்து ஒரு வருடத்தில் தாயாகி விட்டாள். இவளுக்கு மணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் மக்கட்பேறு இன்னமும் இல்லை. 

8. அவன் இருபத்தி இரண்டு வயதில் படித்து பட்டம் பெற்று ஐந்து வருடம் காத்திருந்தபின் தான் வேலை கிடைத்தது. 

9. மற்றொருவன் 27 வயதில்தான் பட்டம் பெற முடிந்தது. ஆனாலும் உடனே வேலை கிடைத்தது.

10. 25 வயதிலேயே மேல் அதிகாரியாகி விட்டவன் ஒருவன், தன்  50 வயதிலேயே மரணமடைந்தான். 

11, மற்றொருவனுக்கு தன் 50 வயதில் தான் உயர் அதிகாரி பதவி கிட்டியது. ஆனால் அவன் 90 வயது வரை வாழ்ந்தான்.

12. உன் நண்பன், இளையவன், உன் கண்முன் முன்னேறுவதைக் கண்டு  பொறாமையோ வருத்தமோ படாதே. பின் தங்கியவர்களை ஏளனம் செய்யாதே.

13. வாழ்வின் ஏற்ற இறக்கங்களும் செல்வ சிறப்புகளும் எல்லோருக்கும் ஒரே காலத்தில் அமையாது. 

14. அவரவர்களுக்கு ஏற்ப கால நிர்ணயம் வகுத்தபடிதான் நடக்கும். 

15. கவலைப்படாதே. திட மனது கொள். காலம் வந்தால் அது தானாக 
      நடக்கும். கால தாமதம் ஆனாலும் 'உனக்கும் காலம் வரும்'.  


பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்