என் தாய்

                                                          என் தாய் 

1. உனக்கு இருபது வயது ஆகும் முன்பே எனக்கு உயிர் தந்தாய். பத்து மாதம் 

    சுமந்து இவ்வுலகில் பிறக்க வைத்தாய்.

2. உன் பாலூட்டி வாழ்க்கையின் என் முதல் பசியை தீர்க்க வைத்தாய்.  

    கிழிந்த துணித்தொட்டியில் படுக்க வைத்து தூங்க வைத்தாய். 

3. என்னை சுமந்த உன்னுடன் விதி விளையாடி நான் பிறந்த ஒரே வருடத்தில் 
    கணவனை இழந்தாய். விதவைத்தாய் என்று  உலகத்தோரிடம் கேலிப்
    பெயர் பெற்றாய்.  ஆனால் தந்தையாகவும் தமயனாகவும் என்னைப்
    போற்றி வளர்த்தாய். 

4. ஏழையின் பணமுடை இருப்பினும் பாட்டும் நாட்டியமும் கற்பிக்க
    வைத்தாய். பள்ளியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி
    அளித்தாய். 

5. பரிசுக் கோப்பையுடன் வீட்டில் நுழைந்த போது என்னை உச்சி முகர்ந்து
    நீ பூரித்தாய்.

6. எச்சிரமும் பாராமல் மூச்சுத்திணற மிதி வண்டியின் பின் ஓடிவந்து நான் 

    முன்னேறுவதைக் கண்டு மனம் மகிழ்ந்தாய். 

7. தனக்கு காச நோய் இருப்பினும் காசு, பணம் பார்க்காமல் என் கல்லூரி
    படிப்பின்  செலவை செய்தாய். 

8. வறுமை இருப்பினும் பொறுமையுடனும், பரிமையுடனும் உலகில்
    என்னை பெயர் எடுக்க வைத்தாய். 

9. என் கணவன் கை பிடித்து என்னை மணமுடித்த மருநாளே
    படிக்கையில் படுத்தாய். 

10. மணமாகி நான் தாயாகி பெற்ற உன் 

     பேரக்குழந்தையை மடியில் வைத்து அகமகிழ்ந்தாய். 

11. என் சுகத்திற்காகவே உன் சுகங்களை எறிந்து விட்டு உயிர்  நீத்தாய். 

      ஆனாலும் உன் உடலை என் கண்முன்னே சிதையில் வைத்து
      எரிக்கப்பட்டதை என்னை ஏன் பார்க்கவைத்தாய்? 

12. கண்ணனையும், கர்த்தரையும் படைத்தது ஒரு தாய். புத்தனையும் நபி 

      நாயகனையும் தரித்தது ஒரு தாய். 

13. நம் நாட்டின் பெயர் சூட்டி நாம் அழைப்பது பாரதத்தாய். 

         "கடவுளே, உனக்கு தாய் தந்தை 

          எவரும் இல்லை. அந்த குறை தீர்க்க 

          உலகில் ஒரு தாய் என்ற பிறவியைப் 

          படைத்தாயோ!"   


 பீமாச்சார் 


Comments

Popular posts from this blog

நான் யார்?

சிதைந்த சிந்தனைகள்