தியானம் (Meditation)



 2. தியானம்  (Meditation)

Photo Credit: National Institutes of Health, USA

  1. மன உளைப்புத்தீர செய் தியானம். மன உளைச்சலுக்கும் தேக அலைச்சலுக்கும் தீர்வு தியானம். அமைதிக்கும் நிம்மதிக்கும் ஒரே மருந்து தியானம்.

  2. அதி காலையிலும் மாலையிலும் நீ செய்திடு தியானம். காலையில் காகம் கரையும் வேளையில் மிகவும் நல்லது தியானம்.

  3. நானும் செய்ய முயன்றேன் காலையில் தியானம். கால் மணி முன்னதாகவே வைத்தேன் அலாரம் மணி அடிக்க.

  4. காலையில் கண்ணதாசன் பாட்டுடன் கடிகாரம் மணி அடிக்க வெறுப்புடன் தானாகவே என் கை அதனை தட்டி அணைத்தது. நித்திரை மன உருதியை கெடுத்து தலையாணியை கட்டி அணைத்தது. மாலையிலோ?

  5. மாலை வீடு வந்தவுடன் 6 மணிக்கு அமெரிக்கா எண்ணை நிலவரம், 7 மணிக்கு யூரோப்பாவின் சந்தை கலவரம்.

  6. எட்டு மணிக்கு கணினி கடிதங்கள் காத்து கிடக்க ஏராளம். அவைகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லை தாராளம்.

  7. ஒன்பது மணிக்கு உற்றார் கூடிய ஒரு வேளை உணவுதான் அதுவே கரணம். பத்து மணிக்கு பட்டென்று படுத்து கனவில் நீண்ட ஒரு பிரயாணம்.

  8. கண்விழுத்துப் பார்க்கையில் கடந்துவிட்டது காலை. அலுவலகத்தில் காத்துக்  கிடக்கின்றன ஏராளமான வேலை. 

  9. பார்க்கலாம் முயன்றால் மற்று ஒரு நாள் தொடங்கலாம் தியானம்.வாழ்க்கையில் எதற்கும் கை கொள்ள வேண்டும் நிதானம். இது என் மனதிற்கு நான் சொல்லிக் கொள்வது இதுவே சமாதானம். 


           பீமாச்சார் 


Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்