பழுத்த கிழவியின் பயனற்ற விரல்கள்



1. அவளுக்கு என்பதும் பத்தும் கடந்திட்ட எண்ணங்கள் நிறைந்த வயது.

2. தலை நரையும் கண்களில் புறையும் சேர்ந்து ஒட்டிய முகத்தில் கண்டேன் ஒரு

    வாட்டம். இருக்கலாம் அவள் கடந்த வாழ்க்கையின் ஒரு பின்னோட்டம் .

3. சுருங்கி சுண்டிப்போன வலுவிழந்த கைவிரல்கள். அவள் அதை வருடியபடியே

கண்விலகாது கீழே நோக்குவது தரையா? அல்லது அதில் அவள்        வாழ்க்கையின்காட்சிகள் ஓடும் வெள்ளித்திரையா?

4. அதன் உண்மைக்காரணம் கேட்ட என்னை அவள் பார்த்தது ஒரு அர்த்தமுள்ள

    பார்வை. அதை தூண்டிவிட்டது போலும் அவள் பின் சரித்திரத்தின் பதிலின்        கோர்வை.

5. நான் பிறந்தது முதல் அம்மாவின் கைபிடித்து எழுந்து  நிற்க உதவியது இந்த      விரல்கள்.

6. பிறகு கால் தடுக்கி விழும்போது தரையில் ஊன்றி நிலைக்கச் செய்தது         இந்தவிரல்கள்.

7. அகர முதல் எழுத்தை கற்பித்தது இந்த விரல்கள். கைகூப்பி கடவுளை வணங்க

  கற்பித்ததும் இந்த விரல்கள்.

8. பல் தேய்க்கவும் அரிசியில் கல் பொறுக்கவும் கற்பித்தது இந்த விரல்கள்.

9. பூ பறிக்கவும் கயிறு இழுத்து நீர் இறைக்கவும் உதவின இந்த விரல்கள்.

10. கலைகளான நாட்டிய முத்திரை பிடிக்கவும், மற்றும் சித்திரம் வரையவும்         கற்பித்தது இந்த விரல்கள். தலையில் பேன் அகற்றவும் ஊசியில் நூல் கோர்கக   பயன்பட்டது இந்த விரல்களே.  

11. மணப்பந்தலில் கணவன் முன் செல்ல அவர் கை பிடித்து  அக்னி வளம்     வந்தது இந்த விரல்கள்.

12. பானை பிடித்ததும், வீணை மீட்டியதும் இந்த விரல்கள்.

13. படைக்கு சென்ற கணவனுக்கு கண் கலங்கியபடியே கடிதம் எழுதியதும் இந்த

   விரல்களே.

14. பெற்ற கண்மணியின் திருமணத்தில் முறை பட்சணத்திற்கு முறுக்கு சுற்றியது   இந்த விரல்கள்.

15. பிறந்த பேரனை எடுத்து உச்சி முகர்ந்தது மற்றும் இப்போது காலம் கடந்த   வயதில் அவன் விரல் பிடித்து தான் நடக்க உதவுவது இந்த விரல்கள்.

16. இப்போது கைகூப்பி காலனை அணுக நடுங்கும் கைகளுடன் வேண்டுகிறது     இந்த விரல்கள்.

17. அவன் அழைக்கும் போது அவன் கைப்பற்றி அவனிடம் செல்லும் போது

   உதவப்போவதும் இந்த விரல்கள்.

 என்று  விரிவாக அவள் விரல்களின் கதையைச் சொல்லி அவற்றை         வருடியபடி விவரித்தாள் அந்த பழுத்த கிழவி.

பீமாச்சார் 
17-01-2023


Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்