கடைசி காலத்தில்

கனவு கவிதைகளா?

கற்பனை கட்டுரையா ?

முன்னுரை 

இதற்குமுன் என் முதல் கவிதை தொகுப்பு "முதுமையில் உதித்த கவிதை தொகுப்பு" என்ற தலைப்பிலும், இரண்டாவது "சிதைந்த சிந்தனைகள்" என்ற தலைப்பிலும் வெளிவந்தது வாசகர்கள் அறிவார்கள். 

அதற்குப்பின் என் 88-ஆம் வயதில் இப்போது முதிர்ந்த முதுமையின் காரணமாக உடலும் உள்ளமும் கோர்வையாக சிந்திப்பதும் எழுதுவதும் மிகவும் கடினமாகி விட்டது. 

இருப்பினும் இப்போது "கடைசி  காலத்தில் கவிதையா? கட்டுரையா?" என்று தலைப்பில் 11 கவிதைகள் எழுதியுள்ளேன்.  அந்த கவிதைகளை இந்த பிளாகில் படிக்கலாம். பதினோரு கவிதைகளும்  இந்த டிசம்பர் மாதத்திலேயே படிக்கக்கிடைக்கும்.

தமிழ் மொழியில் தட்டு எழுத்தில் தொகுத்து கொடுப்பவர்கள் அரிதாகி விட்டார்கள். சென்னை அணுகி தட்டு எழுத்தில் மாற்றி தொகுத்து திருத்தி பெங்களூரில் இருந்து வெளிக்கொண்டு வருவது கடினமாகி விட்டது. மேலும் தட்டு எழுத்து மூலமாக மிக குறைந்த அளவில் பிரிதிகளை வெளிக்கொண்டு வருவது, குறைந்த செலவு செய்து இலவசமாக கொடுப்பது உசிதம் என்றே தோன்றியது.                

ஆகையால் போட்டோ காப்பி மூலம் பிரதிகளை வேண்டுமளவு விநியோகிக்க முடிவு செய்துள்ளேன். வாசகர்கள் மன்னிக்கவும்.

உங்கள் விமர்சனங்களை தயக்கமில்லாமல் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். 

இப்படிக்கு     

முதுமை தமிழன்  பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்