சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

 

கவிதையில் சிரிப்பு வருவது எப்படி

என்று கனவில் கண்டேன். இதோ!

வாய்விட்டுச் சிரிப்பு,  வாய்க்குள்ளே சிரிப்பு, வெண்கலச் சிரிப்பு

கேலிச் சிரிப்பு, கைகொட்டிச் சிரிப்பு

கள் அருந்தியவனின் கேனச் சிரிப்பு

காதலர்களின் கள்ளச் சிரிப்பு

பால் மணம் மாறா குழந்தையின் கபடமற்ற சிரிப்பு

ராக்ஷஸ சிரிப்பு, ராவணன் சிரிப்பு,

கொலைகாரனின் கொலைவெறி சிரிப்பு

பொய் சிரிப்பு, பேய் சிரிப்பு, பொக்கவாய் சிரிப்பு

புன்சிரிப்பு, பொறாமை சிரிப்பு,

காசு பணம் இன்றி ஒன்று மட்டுமே இருப்பது  சிரிப்பு,

மானிடர்களுக்கு மட்டுமே அவன் கொடுத்த வரம் சிரிப்பு.

காலையில் கடற்கரையில் கும்பலாக சங்கத்தில் பலவகை சிரிப்பு,

ஆனந்த சிரிப்பு, ஆணவச்சிரிப்பு. கடைசியாக,

ஆலயத்தில் சிலையாக நிற்கும் அந்த ஆண்டவனின்

முகத்தில் தோன்றும் "மர்ம புன்சிரிப்பு"

 

பீமாச்சார்

Comments

Post a Comment

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்