நிலை இல்லாத நினைவுகள்

 

எண்ணங்கள் உதிப்பதற்கு

கால அளவு இல்லை

இடம், நேரம்  என்பது இல்லை

கடந்த 85 வருட கால வாழ்க்கையை எண்ணிப்பார்த்தேன்

வாழ்ந்த காலத்தின் ஏடுகளை புரட்டிப்பார்த்தேன்

இதோ அதன் விளைவு ஒரு கவிதை

 

இவெண்ணங்கள் எப்போது நிற்கும்?

எண்ணங்களின் உற்பத்தி என் மனம்,

அம்மனம்  எப்போது செயல் இழக்கும்?

மரணம் அல்லது மூளை இழப்பில்தான்

பிறகு என் மனம் நிலைத்து இருப்பது எப்போது?

 

கடந்து வந்த ஆண்டுகளில் எத்தனைகோடி எண்ணங்கள்?

எங்கேயோ படித்த நினைவு! ஒரு தினத்தில் மனதில்

உதிப்பது 50 ஆயிரம் எண்ணங்கள்.

பருவத்திற்கேற்ப பலவகை எண்ணங்கள்.

பசி, பாசம், பற்று, பால்உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள்.

கட்டுப்படாத எண்ணங்களைக் கட்டுப்பதுத்த, எண்ணங்கள்.

                      முடிவாக

நினைவு இல்லாத நிலைதான் எண்ணங்களின் முடிவோ!

                      அதுதான்

"சமாதி நிலையோ இல்லை சாந்தி நிலையோ"

பீமாச்சார்

 



Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்