எங்கயோ ஒலித்த ஒரு குரல்

 பனிமலையில் பள்ளத்தில் படுத்து

பட்டாளத்தில் எல்லையை பாதுகாக்கும் அவன்

தன பால்மணம் மாறாத பாலகனை விட்டுப்பிரிந்த

வருத்தத்தில் பகல் கனவுகண்டு,

"விம்மி அழும் குரலா அது?"

தான் பாத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சிசு

பல நாட்கள் ஆகியும் பார்வையின்றி

படித்திருக்கும் பரிதாபத்தை நோக்கி தாய் துக்கத்தில்

"விம்மி அழும் குரலா அது?"

 

மூப்பும் நோயும் சேர்ந்து மூங்கில் கட்டிலில்

படித்திருக்கும் ஏழை முருகன் தன மகன் கையேந்தி

பிச்சை எடுக்கும் நிலையை எண்ணி

"விம்மி அழும் குரலா அது?"

 

தான் உழுது விதைவிதைத்து, பயிரிட்டு, கதிர் முற்றித்

தலை சாய்க்கும் வேளையில், காற்றும் மழையும் சேர்ந்து

வெள்ளப்பெருக்கில் வெறும் மண் வயலாக

நிற்பதைப் பார்த்து உழவன்

"விம்மி அழும் குரலா அது?"

 

பருவம் எய்தி பல வருடங்கள் கடந்திட்ட போதிலும்

தன மகளுக்கு, மணம் முடிக்கப் பணம் தேடி, தவிக்கும்

மூப்புத் தந்தையின் "விம்மி அழும் குரலா அது?"

 

நாத்து நடச்சென்ற அவள் நாட்டாமை கையில் சிக்கி

கற்பை இழந்து கர்ப்பமாக நிற்கும் அந்த அபலையின்

"விம்மி அழும் குரலா அது?"

 

இந்தக் குரல்களின் நடுவே இன்னும்

ஏதோ ஒரு குரல் கேட்டது.

அது எங்கே? என் உள்ளத்தில்

எழுந்த குரல் அல்லவோ அது? ஏன்?

 

இந்த எல்லா குரல்களின் குறைகளைத் தீர்க்க வழி

எதுவும் காண இயலாது ஏக்கத்தில் வருந்தும் என் குரலோ!

 

பீமாச்சார்

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்

சிதைந்த சிந்தனைகள்