Posts

Showing posts from August, 2021

எங்கயோ ஒலித்த ஒரு குரல்

  பனிமலையில் பள்ளத்தில் படுத்து பட்டாளத்தில் எல்லையை பாதுகாக்கும் அவன் தன பால்மணம் மாறாத பாலகனை விட்டுப்பிரிந்த வருத்தத்தில் பகல் கனவுகண்டு , " விம்மி அழும் குரலா அது ?" தான் பாத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சிசு பல நாட்கள் ஆகியும் பார்வையின்றி படித்திருக்கும் பரிதாபத்தை நோக்கி தாய் துக்கத்தில் " விம்மி அழும் குரலா அது ?"   மூப்பும் நோயும் சேர்ந்து மூங்கில் கட்டிலில் படித்திருக்கும் ஏழை முருகன் தன மகன் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையை எண்ணி " விம்மி அழும் குரலா அது ?"   தான் உழுது விதைவிதைத்து , பயிரிட்டு , கதிர் முற்றித் தலை சாய்க்கும் வேளையில் , காற்றும் மழையும் சேர்ந்து வெள்ளப்பெருக்கில் வெறும் மண் வயலாக நிற்பதைப் பார்த்து உழவன் " விம்மி அழும் குரலா அது ?"   பருவம் எய்தி பல வருடங்கள் கடந்திட்ட போதிலும் தன மகளுக்கு , மணம் முடிக்கப் பணம் தேடி , தவிக்கும் மூப்புத் தந்தையின் " விம்மி அழும் குரலா அது ?"   நாத்து நடச்சென்ற அவள் நாட்டாமை கையில் சிக்கி கற்பை இழந்து கர்ப்பமாக நிற்கும

கடவுள் எப்போது சிரித்தான்?

  இரண்டு கையில்லாத முடவன் கண் பார்வையற்றவன் கால் தடுக்கி விழுவதைப்பார்த்துச் சிரித்தான். அதே கண்ணிலாதவன் கையில்லாத முடவனுக்கு தன் கையினால் எடுத்து கஞ்சி ஊட்டுவதைப் பார்த்து, "கடவுள் சிரித்தான்".   நோயாளியின் உயிரைக் காப்பாற்ற உறுதியளித்த வைத்தியர் மறுநாளே உயிர் பிரிந்ததைப் பார்த்து, "கடவுள் சிரித்தான்".   மக்கட்பேறு இல்லாதவளை இவள் மலடி என்று பரிகசித்தாள், ஆனால்   இவள் நோயுற்று படுக்கையில் படுத்திருக்க, தான் பெற்ற பாலகனுக்குப் பாலூட்ட இயலாதபோது அந்த மலடி தன் மடியில் பாலாடை கொண்டு பாலூட்டியதைப் பார்த்து, "கடவுள் சிரித்தான்".   கொடிய பாவம் செய்து கோடி பணம் சேர்த்த கோடிஸ்வரன் கோடி வீட்டு ஏழை கோபாலனைப் பார்த்து கேலி செய்தான்!   அதே கோடிஸ்வரன் இறந்தபொழுது கோடி வீட்டு கோபாலன் அவனை நாலில் ஒருவனாகத் தோள்கொடுத்து, தூக்கிச் செல்வதைப் பார்த்து, "கடவுள் "சிரித்தான்".   பாவங்கள் பல செய்து பலரை ஏமாற்றிப் பணம் குவித்தவன், அவன் திருப்பதி உண்டியலில் பாதி பணத்தைப் பகிர்ந்து கொடுத்து பாவங்களைப் போக்க

சிதைந்த சிந்தனைகள்

  நான் யார் என்ற கேள்வியை, என் மனதை நானே கேட்டுக்கொண்டேன் பதில்   "நீ ஒரு எண்ணங்களை எண்ணத்தெறியாத எழுத்தாளன், சிற்பக்கலை கற்காத சிற் பி, ஓவியம் வரையாத ஓவியன், மணல் மேடுகள் தெரியாத மாலுமி, கலங்கரை காணாத கப்பலோட்டி, ஆண்டவனை அறியாத அறிஞன், பக்தி என்னவென்று தெரியாத பக்தன், வழி தெரியாது நடக்கும் வழிப்போக்கன், கற்பனை அறியாத கவிஞன், சிந்திக்க தெரியாத சிந்தனையாளன்"