Posts

Showing posts from April, 2023

உனக்கும் காலம் வரும்

Image
1. சிங்கப்பூர் மக்கள் தூக்கத்திலிருந்து விழுத்து எழுந்து இரண்டு மணி நேரம்   ஆகிவிட்டது. ஆனாலும் இந்தியர்கள் அச்சமயம் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக இந்தியர்களை  சோம்பேறிகள்  என்று எண்ண வேண்டாம். 2. சூரியன் கிழக்கே முதலில் உதிப்பது சிங்கப்பூரில். அது இந்தியாவைவிட  முன்னதாகவே. அதுதான் கால வித்தியாசம் .  3. உலகில் எல்லா உயிரினங்களும் அவரவரகளின் இயற்கை நிர்ணயத்தின்படி கால வித்தியாசத்திற்கு உட்பட்டவை. வாழ்க்கை என்பது   ஒரு மாறுபட்ட காலத்தின் கோலம்.  4. யானைக்கு நூறு வயது என்றால் பூனைக்கு பத்து வயது காலம். நத்தை  நகர்கிறது.  நாற்பது மைல் ஓடும் சிறுத்தையின் வேகம். அது அவரவர்களின் காலம். கடவுள் கொடுத்த திறமை. இயற்கை.   5. தாமரை காலையிலும் அல்லி மாலையிலும் பூக்கிறது. ஆறு மாத பயிர்களும் உண்டு. ஆறு வார செடிகளும் உண்டு. அது அவர்களின் காலம்.  6. ஒருவருக்கு முப்பது வயதுமுடிந்தும் மணமாகவில்லை. இவருக்கு 20      வயதில் மணம் முடிந்துவிட்டது. 7.  அவளுக்கு மணம் முடிந்து ஒரு வருடத்தில் தாயாகி விட்டாள். இவளுக்கு மணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் மக்கட்பேறு இன்னமும் இல்லை.  8. அவன் இருபத்தி இ

என் தாய்

Image
                                                           என் தாய்  1. உனக்கு இருபது வயது ஆகும் முன்பே எனக்கு உயிர் தந்தாய். பத்து மாதம்      சுமந்து இவ்வுலகில் பிறக்க வைத்தாய். 2. உன் பாலூட்டி வாழ்க்கையின் என் முதல் பசியை தீர்க்க வைத்தாய்.       கிழிந்த துணித்தொட்டியில் படுக்க வைத்து தூங்க வைத்தாய்.  3. என்னை சுமந்த உன்னுடன் விதி விளையாடி நான் பிறந்த ஒரே வருடத்தில்      கணவனை இழந்தாய். விதவைத்தாய் என்று  உலகத்தோரிடம் கேலிப்     பெயர் பெற்றாய்.  ஆனால் தந்தையாகவும் தமயனாகவும் என்னைப்     போற்றி வளர்த்தாய்.  4. ஏழையின் பணமுடை இருப்பினும் பாட்டும் நாட்டியமும் கற்பிக்க     வைத்தாய். பள்ளியில் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள பயிற்சி     அளித்தாய்.  5. பரிசுக் கோப்பையுடன் வீட்டில் நுழைந்த போது என்னை உச்சி முகர்ந்து     நீ பூரித்தாய். 6. எச்சிரமும் பாராமல் மூச்சுத்திணற மிதி வண்டியின் பின் ஓடிவந்து நான்      முன்னேறுவதைக் கண்டு மனம் மகிழ்ந்தாய்.  7. தனக்கு காச நோய் இருப்பினும் காசு, பணம் பார்க்காமல் என் கல்லூரி     படிப்பின்  செலவை செய்தாய்.  8. வறுமை இருப்பினும் பொறுமையுடனும், பரிமையுடனும்