Posts

Showing posts from February, 2023

வானம் பிளந்தது, சென்னை மிதந்தது

Image
Photo   Licensed under the  Government Open Data License - India (GODL) சென்னையில் அன்று வானம் பிளந்தது.  மாநகர வாழ்க்கை முற்றிலும் சிதைந்தது. தெருக்களில் வாகனங்கள்  மிதந்தன. விடாமல் நாட்கள் பெருமழை பொழிந்தது. செய்கை நாகரீக  நகரத்தின் செருக்கு ஒழிந்தது. இதைகண்ட இயற்கை கை  கொட்டி சிரித்தது. இரண்டு மாடி மனைகளில் புகுந்தது மழை தண்ணீர். பல குடும்பங்களின்  கண்களில் வழிந்தது கண்ணீர்.  வேகமாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியது வெள்ளத்தில் மிதந்த  அந்த வேளச்சேரி. கூவத்தில் வெள்ளம் கரை புரண்டு அடித்துச் சென்றது.  அதன் இரு கரைகளில் சேரி.  கூரையின் மேல் நின்று உணவுக்கு கூவியது ஒரு செல்வாக்கு குடும்பம். குடி  தண்ணீருக்கு தவித்துக் கதறியது ஒரு கூட்டுக்  குடும்பம்.  சொகுசுக் கார்கள் இருந்தும் பயனில்லை வீதி கடக்க. ஆனால் மீனவர்களின்  மரப்படுகுகள் உதவியது கரை சேர்க்க.  கரைகளில் கண்மூடித்தனமாக கட்டடங்கள் அத்து மீறி தன உடலில் சேதம்  தாங்காது உடைந்து பழி தீர்த்தது ஏரி.  வெள்ளம் சூழ்ந்து தவித்தது வானளாவிய அடுக்குமாடி. மின்சாரம் இல்லாது  பல இடங்களில் தவித்து நின்றது, அடுக்கு மாடிகள். அதுதான் அவர்களின்  உயிர

தியானம் (Meditation)

Image
  2. தியானம்  (Meditation) Photo Credit: National Institutes of Health, USA மன உளைப்புத்தீர செய் தியானம். மன உளைச்சலுக்கும் தேக அலைச்சலுக்கும் தீர்வு தியானம். அமைதிக்கும் நிம்மதிக்கும் ஒரே மருந்து தியானம். அதி காலையிலும் மாலையிலும் நீ செய்திடு தியானம். காலையில் காகம் கரையும் வேளையில் மிகவும் நல்லது தியானம். நானும் செய்ய முயன்றேன் காலையில் தியானம். கால் மணி முன்னதாகவே வைத்தேன் அலாரம் மணி அடிக்க. காலையில் கண்ணதாசன் பாட்டுடன் கடிகாரம் மணி அடிக்க வெறுப்புடன் தானாகவே என் கை அதனை தட்டி அணைத்தது. நித்திரை மன உருதியை கெடுத்து தலையாணியை கட்டி அணைத்தது. மாலையிலோ? மாலை வீடு வந்தவுடன் 6 மணிக்கு அமெரிக்கா எண்ணை நிலவரம், 7 மணிக்கு யூரோப்பாவின் சந்தை கலவரம். எட்டு மணிக்கு கணினி கடிதங்கள் காத்து கிடக்க ஏராளம். அவைகளுக்கு பதில் அளிக்க நேரம் இல்லை தாராளம். ஒன்பது மணிக்கு உற்றார் கூடிய ஒரு வேளை உணவுதான் அதுவே கரணம். பத்து மணிக்கு பட்டென்று படுத்து கனவில் நீண்ட ஒரு பிரயாணம். கண்விழுத்துப் பார்க்கையில் கடந்துவிட்டது காலை. அலுவலகத்தில் காத்துக்  கிடக்கின்றன ஏராளமான வேலை.  பார்க்கலாம் முயன்றால் மற்று ஒரு நாள