Posts

Showing posts from March, 2022

நிலை இல்லாத நினைவுகள்

  எண்ணங்கள் உதிப்பதற்கு கால அளவு இல்லை இடம் , நேரம்   என்பது இல்லை கடந்த 85 வருட கால வாழ்க்கையை எண்ணிப்பார்த்தேன் வாழ்ந்த காலத்தின் ஏடுகளை புரட்டிப்பார்த்தேன் இதோ அதன் விளைவு ஒரு கவிதை   இவெண்ணங்கள் எப்போது நிற்கும் ? எண்ணங்களின் உற்பத்தி என் மனம் , அம்மனம்   எப்போது செயல் இழக்கும் ? மரணம் அல்லது மூளை இழப்பில்தான் பிறகு என் மனம் நிலைத்து இருப்பது எப்போது ?   கடந்து வந்த ஆண்டுகளில் எத்தனைகோடி எண்ணங்கள் ? எங்கேயோ படித்த நினைவு! ஒரு தினத்தில் மனதில் உதிப்பது 50 ஆயிரம் எண்ணங்கள். பருவத்திற்கேற்ப பலவகை எண்ணங்கள். பசி , பாசம் , பற்று , பால்உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள். கட்டுப்படாத எண்ணங்களைக் கட்டுப்பதுத்த , எண்ணங்கள்.                       முடிவாக நினைவு இல்லாத நிலைதான் எண்ணங்களின் முடிவோ!                        அதுதான் " சமாதி நிலையோ இல்லை சாந்தி நிலையோ" பீமாச்சார்  

அந்திய காலம் அமைதியான காலமா?

  கடமைகள் முடித்துக் கால்நீட்டி சுகமாகக் காலம் களிக்கும் வாழ்க்கை முதுமை வாழ்க்கை என்ற ஒரு நோக்கம்.   ஆகையால் , முதுமை என்னும் அந்திய வாழ்க்கை அமைதியான வாழ்க்கை என்று பலருக்கு ஒரு எண்ணம். ஆனால் , இதோ!   * காசு இல்லாது கஞ்சிக்குத் தவிக்கும் முதியோர் பலர். * காசு இருந்தும் காவலுக்கு எவரும் இல்லாது தவிக்கும் சிலர். * கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தாலும் கூழுக்கு எதிர்பார்த்து   வாழ்பவர்களும் சிலர் உண்டு. * பல் இல்லாத பொக்கை வாயில் பொரிதின்று காலம்   கடத்துபவர்கள் உண்டு. * பழைய நினைவுகளில் புதைந்து   வெறும் வாயை மெல்லும் சிலர் உண்டு. * எதிர்காலத்தில் எதிர்பார்ப்பது எதை ?   எதிர்ப்பது எப்படி என்று எண்ணி ஏங்கும் பலர் உண்டு. * பெற்றெடுத்துப் பேணிய மக்கள் இருப்பினும் , மேல் நாட்டுக்கு   அவர்கள் சென்று துணையின்றித் தவிக்கும் சிலர் , மலடியே   மேல் என்று நொந்து கொள்பவரும் உண்டு. *   தரையில் நடக்க தள்ளாடும் சிலர். * இருமலில் இருட்டு அறையில் படுத்து இரவெல்லாம்   உறக்கமின்றி இறுதி நாட்கள் நோக்கிக் கிடப்பவர்கள் சிலர். * கண்புரையும் திரையும் விழுந்து , கண்