Posts

Showing posts from January, 2023
Image
  பழுத்த கிழவியின் பயனற்ற விரல்கள் 1. அவளுக்கு என்பதும் பத்தும் கடந்திட்ட எண்ணங்கள் நிறைந்த வயது. 2. தலை நரையும் கண்களில் புறையும் சேர்ந்து ஒட்டிய முகத்தில் கண்டேன் ஒரு     வாட்டம். இருக்கலாம் அவள் கடந்த வாழ்க்கையின் ஒரு பின்னோட்டம் . 3. சுருங்கி சுண்டிப்போன வலுவிழந்த கைவிரல்கள். அவள் அதை வருடியபடியே கண்விலகாது கீழே நோக்குவது தரையா ? அல்லது அதில் அவள்        வாழ்க்கையின் காட்சிகள் ஓடும் வெள்ளித்திரையா ? 4. அதன் உண்மைக்காரணம் கேட்ட என்னை அவள் பார்த்தது ஒரு அர்த்தமுள்ள     பார்வை. அதை தூண்டிவிட்டது போலும் அவள் பின் சரித்திரத்தின் பதிலின்        கோர்வை. 5. நான் பிறந்தது முதல் அம்மாவின் கைபிடித்து எழுந்து   நிற்க உதவியது இந்த      விரல்கள். 6. பிறகு கால் தடுக்கி விழும்போது தரையில் ஊன்றி நிலைக்கச் செய்தது         இந்த விரல்கள். 7. அகர முதல் எழுத்தை கற்பித்தது இந்த விரல்கள். கைகூப்பி கடவுளை வணங்க    கற்பித்ததும் இந்த விரல்கள். 8. பல் தேய்க்கவும் அரிசியில் கல் பொறுக்கவும் கற்பித்தது இந்த விரல்கள். 9. பூ பறிக்கவும் கயிறு இழுத்து நீர் இறைக்கவும் உதவின இந்த விரல்கள்.