Posts

Showing posts from May, 2023

காலம் கடந்த கட்டபொம்மன் வழி கேள்விகள்

Image
1. அன்று ஆங்கிலேயரிடம் கட்டபொம்மன் கேட்ட கேள்வி, இயற்கையில் காணும் கட்சிகளைக் கண்டு அவைகள் தூண்டவைத்தது. விடை தேடும் இந்த பல கேள்விகள்.  2. நதி தன்  நீர்கொண்டு உன் நிலத்திற்கு நீர் பாசனம் செய்ய நீர் வரி கேட்பதில்லை. ஏன்? 3. கார்மேகம் மழை பொழிய கட்டணம் கேப்பதில்லை. ஏன் ? 4. கதிரவன் காலம் தவறாது காலையில் உதிக்க ஊதியம் கேட்பதில்லை. ஏன்? 5. குழல் போல் கூவும் குயில், தோகை விரித்து ஆடும் மயில் கூலி கேட்பதில்லை. ஏன்? 6. பல வர்ணமும் வாசனையும் கொண்ட பூ மலர்கள் போது குலுங்குவதற்கு பாராட்டு எதிர்பார்ப்பதில்லை. ஏன்? 7. பட்டாடை நெய்ய பட்ட நூலுக்காக பலி கொடுத்த பல்லாயிரம் பட்டுப்பூச்சிகள் பதக்கம் கேட்பதில்லை. ஏன்? 8. பதநீர் ஈன்ற பனைமரத்திற்கும் இளநீர் தரும் தென்னைக்கும், செய் நன்றி செப்பினாயா? ஏன்?  9. கரி  பொருள் எறிவாயுவும் மீன் இனங்களும், கடலில் நீ எடுத்த  செல்வங்கள். இவைகளுக்கு ஏதேனும் கைமாறு  எவரேனும்  செய்ததுண்டா? இல்லையே! 10. விடை விதைத்து விவசாயம் செய்து வியாபாரம் செய்யும் நீ அந்த விதைகளுக்கும், வித்துகளுக்கும்   விசுவாசம் காட்டியது உண்டா ? 11. மணமணக்கும் மரச்சந்தினத்தை, மனமாற நீ வாழ்த்தியது