Posts

Showing posts from March, 2023

பனிமலையில் கண்டெடுத்த பாரத புதல்வன்

Image
                                                         Photo Credit: Express photo: Pradeep Kumar, Indian Express 1. இமய மலை பனியில் பத்து நாட்கள் படுகுழியில் புதைந்து வெளிவந்த     பாரதப்படை வீரன், பாரத தேசத்திற்கே ஒரு பாடம் கற்பித்த  தீரன். 2. நம் நலம் வேண்டி நாடி துடி துடித்து நற்கதி அடைந்த நம்மில் ஒரு      நரேந்திரன் அவன்.  3. கடும் பனியில் அறுசுவை உண்டிலன். அறை மஞ்சத்தில் உறங்கிலன். தன்      கண்மணி குழைந்தையை கொஞ்சிலன். கை பிடித்த அவளை அணைத்திலன் . 4. உயர பனியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திலன். த ன் சொந்த பந்தங்களை      வெகுநாள் பார்த்திலன். 5. காலன் எப்பொழுதும் எதிரிலேயே நிற்பது நினைத்திலன். வெள்ளி பனி      மலையில் பனியைத் தவிர வேறு பசுமையும் பறக்கும் பறவைகளையும்      கண்டு களித்தலன், அனுமந்தப்பா என்று பெயர் படைத்த அவன்.  6. கர்நாடகத்தின் கர்ம வீரன் அவன்.  அன்னை பாரதத்தாயை காக்க அமர     மரணம் எய்தவன் அவன். நாட்டைக் காக்க உயிர் கொடுத்த அவனுடைய      வீட்டைக் காக்க யார் முன் வருவார்? பீமாச்சார்  NDTV, along with several other channels, covered the incident of the avalanche in the Sia