Posts

Showing posts from July, 2021

நான் யார்?

  இப்போது என் வயது   தொன்னூறு ஆகிறது. நான் தமிழ் மொழி கற்று தேர்ந்த வல்லவன் அல்ல. அதுவில்லாமல் என் தாய் மொழி கன்னடம். தமிழ் நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தேன். என் பெற்றோரின் 14 குழந்தைகளில் 12 வதாக பிறந்தேன். ஏழாம் வகுப்பு வரையில்தான் தமிழில் கற்றேன்.   பிறகு வடமொழி சம்ஸ்க்ரிதம் சிறப்பு மொழியாகத்தேர்ந்து எடுத்தேன். S. S. L. C. வரையில் பள்ளியில் படித்தேன். பிறகு கல்லூரி வாயில் நுழையக்கூடிய வாய்ப்பு இல்லை. 1947-இல் வயிற்று ப் பிழைப்புக்கு பம்பாய் நகரம் சென்றேன். கப்பல் கட்டும் தொழில் கற்று தேற்ச்சி பெற்றேன்.   பிறகு டில்லி தலை நகரத்தில் கப்பல் படை தலைமை அலு-வலகத்தில் 30 வருடம் சேவை செய்தேன். சிறுவனாக இருக்கும் போது தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்கி, கலைமகள், அமுத சுரபி போன்ற பத்திரிகைகளை படிப்பதில் ஆவல். மா போ சி, கிருபானந்த வாரியார், கி. ப. ஜகந்நாதன், நாமக்கல் கவிஞர் போன்ற பல தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகளை கேட்க வாய்ப்பு கிட்டிற்று. வடநாட்டுக்கு சென்ற பின் தமிழ் மொழியில் கவிதைகளையோ கட்டுரைகளையோ படிக்க அல்லது அறிஞர்கள